திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் அரபா நகரை பிறப்பிடமாகவும் கிண்ணியாவை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது ஹனிபா அனஸ் மாவட்ட சமாதான நீதவனாக கடமையாற்றி தற்பொழுது முழு தீவிற்குமான அகில இலங்கை சமாதான நீதவனாக திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதவான் எம். கணேசராஜா அவர்கள் முன்னிலையில் நேற்று (25) சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் இளமானி பட்டத்தை பூர்த்தி செய்த இவர் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றியும் வருகிறார். அதீத சமூக ஈடுபாடு கொண்ட இவர் முகம்மது ஹனீபா மற்றும் அகமது லெப்பை மரியம் வீவி தம்பதிகளின் புதல்வருமாவார்.
0 comments :
Post a Comment