கண்டி மெனிக்ஹின்ன உயர்தர பாடசாலை மாணவர்கள் இருவரின் நெகிழ்ச்சியான செயல்பாட்டால் குவியும் பாராட்டுக்கள்



எம்.எம்.ஜெஸ்மின்-
ண்டி மெனிக்ஹின்ன உயர்தர பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் வீதியில் பெண்ணொருவரினால் தவறவிடப்பட்ட பணப்பை மற்றும் தங்கப் பொருட்களை கண்டெடுத்து உரிமையாளரிடம் வழங்கியுள்ளனர்.

90000 ரூபாய் பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் பணம், பணப்பையை வீதியிலிருந்து எடுத்து தனது வகுப்பாசிரியரிடம் ஆசிரியரிடம் ஒப்படைத்து பின்னர் உரிமையாளரிடம் வழங்கியுள்ளனர்.

13 வயது நிரம்பிய மதுசங்க ருக்ஷான் ,யசித் சமல் ரத்நாயக்க மற்றும் இசுரு சமத்சேனாதிர ஆகியோர் கடந்த திங்கட் கிழமை (22) நடன வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது, ​​தரையில் கிடந்த பணப்பையை கண்டு அதனை எடுத்து பாடசாலை நடன ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து அதிபர் ஊடாக உரிமையாளரின் விபரங்களை உறுதிப்படுத்தி பாடசாலைக்கு அழைத்து பணம் மற்றும் தங்கப் பொருட்கள் அடங்கிய பணப்பையை அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களின் செயற்பாட்டிற்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :