அடிப்படை மொழி உரிமையை மீறும் போக்குவரத்து பொலிஸார்?



லங்கை நாட்டில் வாழும் பிரஜைகளுக்கான அடிப்படை உரிமைகள் பற்றி யாப்பில் சொல்லப்பட்டுள்ள போதிலும் வடகிழக்கில் கூடுதலாக அது மறுக்கப்படுகிறது.

போக்குவரத்து பொலிஸார் (High way) தண்டப் பண சிட்டையில் தமிழ் பேசும் சிங்கள மொழி தெரியாத பகுதிகளில் வசித்து வந்த போதிலும் சிறுபான்மை மக்களுக்கு தெரியாத மொழியில் தான் எழுதிகிறார்கள் இது அடிப்படை உரிமை மீறல்களில் ஒன்றாகும் என தெரிவிக்கப்படுகிறது.

 சிங்கள மொழியில் மாத்திரமே குற்றத்தின் தன்மை மற்றும் பெயர் முகவரி போன்றன எழுதுவதனால் மொழி உரிமை மீறப்படுகிறது அடிப்படை உரிமை மீறப்படுகிறது ஆரம்பமே பிழையாக உள்ளது எப்படி ஏனைய சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியும். 

வட கிழக்கில் அதிகமாக தமிழ் பேசுவோர் உள்ள போதிலும் சிங்கள மொழி மூலமான தண்டப் பணச் சிட்டை போக்குவரத்து பொலிஸாரால் வழங்கப்படுகிறது. 

கிண்ணியா குட்டிக்கராச்சி சந்தியில் திருகோணமலை போக்குவரத்து பொலிஸ் பிரிவினால் (High way ) இவ்வாறான அடிப்படை மொழி உரிமை 2024.07.16 மீறப்பட்டுள்ளதுடன் இதனை PS71687 எனும் இலக்கமிடப்பட்ட போக்குவரத்து பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கள மொழியில் எழுதி விட்டு கிண்ணியா பொலிஸ் என்பதை மாத்திரம் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் இது அடிப்படை உரிமை மீறல் என உரிய மோட்டார் சைக்கிள் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

சட்ட ரீதியாக கடமையாற்றுபவராக இருந்தால் கடமை நிமித்தம் வீதியில் நிறுத்தும் போது வெள்ளை நிற தலைக் கவசம் அல்லது வெள்ளை நிற பொலிஸ் தொப்பி அணிய வேண்டும் இதை கூட அணியாமல் கடமையில் அவர்களே சட்டத்தையும் மீறி அடிப்படை உரிமையையும் மழுங்கடிக்கச் செய்கிறார்கள்.
இது தொடர்பில் உரிய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் சம்மந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :