சாய்ந்தமருது ரியாழுல் ஜன்னா வித்தியாலய தளபாட கொள்வனவுக்கு ஹரீஸ் எம்.பி நிதி ஒதுக்கீடு !!



மாளிகைக்காடு செய்தியாளர்-
முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாராளுமன்ற உறுப்பினரின் டி-100 வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் பயனாக கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ ரியாழுல் ஜன்னா வித்தியாலய தளபாட கொள்வனவுக்கு இன்று (23) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவணம் கையளிக்கப்பட்டது.

கமு/கமு/ ரியாழுல் ஜன்னா வித்தியாலய அதிபர் ஏ.எம். அஸ்தர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஒரு மில்லியன் ரூபாய்க்கான நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தை கையளித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாபா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா உமர் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :