தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் யார்? செல்வம்அடைக்கலநாதன் தெரிவாவாரா?



வி.ரி.சகாதேவராஜா-
மிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழுத் தலைவராக யார் தெரிவு செய்யப்படுவார் என்பது ஓரிரு தினங்களில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழு தலைவராகவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவராகவும் இரா. சம்பந்தனே தொடர்ந்து பதவியில் இருந்தார்.

அவரது மறைவிற்குப் பிறகு அந்த பதவிகள் வறிதாகியுள்ளன.

அந்த வெற்றிடத்துக்கும் தற்போதுள்ள 10 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை அந்த 10, பேரும் கூடி தெரிவு செய்யவேண்டும்.

அதை ஓரிரு தினங்களில் தெரிவு செய்து சபாநாயகருக்கு கட்சி செயலாளர் எழுத்துமூலமாக வழங்கவேண்டும். அல்லது பத்து உறுப்பினர்களும் கையொப்பம் இட்டும் வழங்க முடியும்.

தற்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி சார்பில் 06 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சிவஞானம் சிறிதரன் எம் ஏ. சுமந்திரன் சார்ள்ஷ் நிர்மலநாதன்
இரா சாணக்கியன். தவராசா கலையரசன் இறுதியாக சண்முகம் குகதாசன் ஆகியோர் உள்ளனர்.

அதேவேளை தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். செல்வம்அடைக்கலநாதன்.வினோ நோகராதலிங்கம் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் உள்ளனர்.

மேலும் தமிழ் மக்கள் விடுதலைக்கழகம் சார்பில் 01 பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்சித்தார்த்தன் உள்ளார். இந்த பத்து உறுப்பினர்களில் ஒருவர் பாராளுமன்ற குழுத்தலைவராக தெரிவாவார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்அடைக்கலநாதன் இப் பதவிக்கு பெரும்பாலும் தெரிவுசெய்யப்படுவார்? என்ற ஊகம் நிலவுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
எனினும் அந்தப் பதவி ஒருவருடமும் நீடிக்க வாய்பு இல்லை.
ஏனெனில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2024, செப்டம்பர் மாததுக்குள் இடம்பெற்று புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி உடனே பாராளுமன்றத்தை கலைக்க வாய்புள்ளதால் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மட்டுமே இந்த பதவி அமுலில் இருக்கும்.
பாராளுமன்ற குழுத்தலைவர் பதவிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் பதவிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :