அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் எந்தவொரு ஊடகவியலாளரையும் அச்சுறுத்தி சித்திரவதை செய்யவில்லை எனவும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஊடக அமைச்சர் என்ற வகையில் தான் இன்று பாராளுமன்றத்தில் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அச்சுறுத்தல்கள் இருப்பதாகவோ அல்லது அவ்வாறான விடயங்களுக்கு முகம் கொடுப்பதாகவோ எவரேனும் கருதுமிடத்து, அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என்றை ஜனாதிபதி குறிப்பிட்டதை நினைவு கூர்ந்த அமைச்சர், பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் அதற்கு தேவையான பாதுகாப்பை வழங்குவார்கள் எனவும், இதனையே அரசாங்கத்தினால் மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
0 comments :
Post a Comment