இலங்கை முஸ்லிங்கள் எமது ஒற்றுமையை பலப்படுத்தி காஸா மக்களுக்காகவும் பிராத்திப்போம் : உலகில் நிம்மதி நிலவ குனூத் நாஸிலா ஓதுவோம் : புத்தாண்டு வாழ்த்தில் கலீலுர்ரஹ்மான்



மாளிகைக்காடு செய்தியாளர்-
ல்வேறு இன்னல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்துக் கொண்டு புதிய இஸ்லாமிய புத்தாண்டை சந்தித்திருக்கும் உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர்ரஹ்மான் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1445 வது ஹிஜ்ரி வருடம் உலக வாழ் முஸ்லிம்களுக்கு நிம்மதியான பல விடயங்களை கொண்டதாக அமைந்திருந்தாலும் கஷ்டமான பல்வேறு நிலைகளையும் கொண்டிருந்ததுடன் மிக துரிதமாக எம்மை கடந்து சென்று இன்று 1446 எனும் புது வருடத்தில் நாம் கால் பதிக்கின்றோம். இந்த வருடத்திலாவது தினமும் பல நூறு உயிர்களை தினம் தினம் காவுகொடுத்து பரிதவித்து நிற்கும் காஸா முஸ்லிம் சகோதர்கள் உட்பட உலகின் பல்வேறு இடங்களிலும் பல கஷ்டங்களுடன் வாழும் எமது சகோதர்கள் நிம்மதியாக வாழ எமது ஐவேளை தொழுகைகளில் குனூத் நாஷீலா ஓதுவதுடன் எமது துஆக்களை கூட்டிக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

தனது செய்தியில் மேலும், உலகில் தோன்றியுள்ள முரண்பாடுகள் நீங்கி அமைதியான வாழ்க்கை முறை சகலருக்கும் கிட்ட இந்த சந்தர்ப்பத்தில் பிராத்தித்து கொண்டு இலங்கையிலும் உறுதியான ஆட்சிநிலை உருவாகி, நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு நாடு வளர்ச்சிப்பாதைக்கு செல்ல எல்லோரும் பிராத்திப்போம்.

எதிர்வரும் காலங்களில் இலங்கை முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரே அணியாக செயற்பட்டு முஸ்லிங்களின் உரிமைகளை எமது நாட்டில் அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் உறுதிப்படுத்த இந்த புத்தாண்டு தினத்தில் திடசங்கடம் பூணுவோம். மேலும் கடந்த காலங்களில் முஸ்லிம் சமுகம் உலகளாவிய ரீதியில் எதிர்கொண்ட அத்தனை கசப்பான, துயரமான நிகழ்வுகளும் இந்த இனிய இஸ்லாமிய புதுவருடத்துடன் இல்லாதொழிந்து நிம்மதியும் அமைதியுமான வாழ்க்கை நம்மை வந்தடைய இந் நன்நாளில் பிரார்த்திப்போம்.

அன்பர்கள் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் இதயங் கனிந்த இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :