நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்துடன் மக்கள் ஒன்றிணைந்துள்ளனர்.-அமைச்சர் மனுஷ நாணயக்கார



ரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் கூறிய தீர்வுக்கு முழு நாடும் கைகோர்த்து வருவதாக இன்று (24) காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற 'ஜயகமு ஸ்ரீலங்கா' நடமாடும் மக்கள் சேவையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

“எனக்கு ஒரு கொள்கை இருக்கிறது, தீர்வு இல்லை என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு கூறினேன் , இன்று அந்தத் தீர்வுக்காக இனம, மத நிற மற்றும் கட்சி வேறுபாடின்றி மக்கள் ஒன்றுபடத் தொடங்கியுள்ளனர்.

நாட்டை கட்டியெழுப்ப புலம்பெர்ந்த தொழிலாளர்களின் பலம் இல்லையென்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் இரண்டு வருடங்களில் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது

காலி மாவட்ட ரன்தொம்பே இல் பிறந்தசி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்கள் முழு நாட்டிற்கும் இலவசக் கல்வியை வழங்கியவர் இன்று பல்கலைக்கழகங்களில் கூச்சலிடுபவர்களுக்கு இது தெரியாது.

இன்று பல்கலைக்கழகப் மாணவர்கள் மகாபொல புலமைப்பரிசிலைப் பெறக் காரணம் லலித் அத்துலத்முதலி அவர்கள் .எனவே இலவசக் கல்வியின் பெறுமதியை அறிந்த ஜனாதிபதி இன்று பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் இங்கு கூறியிருந்தேன் , எனக்கு கொள்கை இல்லை, என்னனிடம் தீர்வு தான் இருக்கின்றது என .அனால் இன்று முழு நாடும் அந்தத் தீர்வுக்காகத் திரண்டுள்ளது.

எனவே இன மதம் நிற கட்சி என பிரிந்து செல்லாது நாட்டுக்கு சிறந்த தீர்வைப் பெற்றுக்கொள்ள மக்கள் ஒன்றுபட ஆரம்பித்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :