ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதி தலைவராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எப்.றிபாஸ்!



லங்கையில் ஊடகத்துறையில் தடம் பதித்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களை கொண்டு இலங்கையின் முக்கிய ஊடக அமைப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தில் இவர் தேசிய பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டிருப்பது இவரது ஊடகத்துறையில் ஒரு மைல் கல்லாகும்.

கடந்த 2002 ஆம் ஆண்டு எழுத்துத் துறையில் கால் பதித்த எம்.எப். றிபாஸ் இலங்கையில் இயங்கி வரும் பல்வேறு தேசிய நாளிதழ்களில் பிராந்திய செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடனும், பத்திரிகை துறை சார் உயர் அதிகாரிகளுடனும் தொடர்பை வைத்துள்ள இவர் நாடறிந்த முக்கிய சிரேஷ்ட ஊடகவியலாளராவார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பதவிகளை வகித்ததோடு தேசிய அமைப்பாளராகவும் பதவி வகித்துள்ள இவர் தற்போது பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்.

ஊடகத்துறையில் பிராந்தியம், மாவட்டம், தேசிய ரீதியில் பல்வேறுபட்ட விருதுகளையும் பதக்கங்களையும் பெற்றுள்ள இவர், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் இதழியல் டிப்ளமோ கற்கை நெறியைப் பூர்த்தி செய்துள்ளார்.

அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் உதவி ஆணையாளராகவும் கடமையாற்றி வரும் அதேவேளை, சாரணியத்துறையில் அதி உச்ச விருதுகளையும் பெற்றுள்ளார். சாரணியத்துறையில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவ்வாறு பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டமைக்காக அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சரணிய சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை சமாதான நீதவனாக செயல்பட்டு வரும் இவர் அம்பாறை மாவட்ட சமாதான நீதவான்கள் அமைப்பின் செயலாளராகவும் இன்னும் முக்கிய பல அமைப்புகளிலும் பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார்.

கடந்த காலங்களில் அரசியல் தலைவர்கள், ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், கல்வியலாளர்கள், ஊடக அமைப்புகள், சமூக சேவை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளினால் நினைவுச் சின்னங்கள், விருதுகள் மற்றும் பொன்னாடைகள் போர்த்தி பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மீடியா போரத்தின் பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள இவர் ஊடகத்துறை சார்ந்து இன்னும் பல உயர் பதவிகள் பெறவும் ஊடகத்துறையில் மேலும் சிறந்து விளங்கவும், பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :