அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு 2024/2025 கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள புதிய பயிலூனர்களுக்கான பதிவுகள் கல்விக் கல்லூரியில் 2024.07.22 ஆம் திகதி இடம்பெறறது
கல்வியல் கல்விக்கல்லூரி பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணிய மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையின் அதிபர் எம்.எச்.அன்வர் சதாத் விஷேட அதிதியாகவும், உப பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நெறிகற்கை நெறிக்கு 80 பயிலூனர்களும், கணித கற்கை நெறிக்கு 23 பயிலூனர்களும்,இஸ்லாம் பாட கற்கை நெறிக்கு,40 பயிலூனர்களும்,விஞ்ஞான கற்கை நெறிக்கு 25 பயிலூனர்களும் விஷேட கற்கை நெறிக்கு 10 பயிலூனனர்களும், வர்த்தகம் மற்றும் கணக்கீடு கற்கை நெறிக்கு 20 பயிலூனர்களும் மொத்தமாக 198 பயிலூனர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment