தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேவைக்கு ஏற்ப தேர்தலுக்கு நிதி ஒதுக்குவதற்கு நிதியமைச்சு தயார்.- அமைச்சர் சியம்பலாபிட்டிய



திர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதியமைச்சுக்கு பணத்தை ஒதுக்கும் திறன் உள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப பணத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்படி, எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் கடுமையான நிதி முகாமைத்துவத்துடன் செயற்படுவதால், அந்தப் பணத்தை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார். தபால், அச்சிடுதல் மற்றும் பாதுகாப்புக்கான செலவுகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும், தேவைக்கு ஏற்ப உரிய பணத்தை விடுவிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நிதி அமைச்சின் செயலாளர் திரு.மகிந்த சிறிவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதுடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பண ஒதுக்கீடு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :