பொதுநலவாயக் குழு - முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு



திர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பது தொடர்பில், அழைக்கப்படும் பட்சத்தில் அதற்கான பூர்வாங்க ஆயத்தங்களை மேற்கொள்வதற்காக தற்போது நாட்டிற்கு வருகைதந்துள்ள Ms. Lindiwe Maleleka (அரசியல் ஆலோசகர்) தலைமையிலான பொதுநலவாய நாடுகளின் தேர்தல்கள் தொடர்பான ஓர் உயர் மட்டக் குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரை சனிக்கிழமை (27) பிற்பகல் கட்சியின் "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

பிரஸ்தாப ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை தாம் தேர்தல்கள் ஆணைக் குழுவிடமிருந்து எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்குமுன்னதாக இந்தத் தேர்தலோடு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பயனுள்ள கருத்துப் பறிமாறல்களில் ஈடுபடுவதன் ஊடாக குறிப்பாக தேர்தல் காலத்தில் எதிர் நோக்கப்படும் சவால்கள் எத்தகையன என்பன பற்றியும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இதன்போது, அரசாங்க ஆளணி முறைகேடாக கையாளப்படக்கூடிய அபாயம் குறித்தும், அரசாங்கத்தின் உடைமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் குறித்தும் தூதுக்குழுனரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவையடுத்து எழுந்துள்ள பொலிஸ் மாஅதிபர் விவகாரம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :