அஸீஸா பௌண்டேன் பணிப்பாளர் சாதிக் ஹசனிடம் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர், அஸீஸா பௌண்டேன் பணிப்பாளர் சாதிக் ஹசற், செக்டோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான ஏ.எல்.நியாஸ், ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கபூர்தீன், றகுமா சமூக சேவை நற்பணி மன்றத்தின் தலைவர் அகீல் அஹமத் உட்பட பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் இந்நிகழ்வில்
கலந்துகொண்டு குறித்த உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
ஏறாவூர் பிரதேசத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு ஒவ்வொரு வருடமும் அஸீஸா பௌண்டேஷன் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment