மருதமுனை ஹம்றா வித்தியாலய மாணவி சுமையா தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு !



நூருல் ஹுதா உமர்-
ண்மையில் நடைபெற்ற மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கல்முனை கல்வி வலய மருதமுனை கமு/கமு/அல்-ஹம்றா வித்தியாலய மாணவியான முஹம்மட் வலீத் பாத்திமா சுமையாவினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது இன்று பாடசாலையின் அதிபர் எம்.எம். முஹம்மட் நியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இணைப் பாடவிதானதுக்குப் பொறுப்பான பிரதி அதிபர் ஏ.எம். சிரின்தாஜ், உதவி அதிபர்கள் மற்றும் சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சாதனை மாணவியை மாலை அணிவித்து கெளரவித்தார்கள்.

அத்தோடு இம் மாணவி தேசிய ரீதியிலும் முதல் நிலை பெற்று பாடசாலைக்கும், வலயத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்திட பாடசாலை சமூகம் சார்பாக அவர்கள் வாழ்த்தியதோடு,
இதற்கு உறுதுணையாகவிருந்த வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும் , பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர், கல்லூரியின் முதல்வர், பிரதி அதிபர்கள், பாட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பாடசாலை சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

இவரது சகோதரியும், இவரும் கடந்த காலங்களிலும் பல்வேறு வலயமட்ட, மாவட்ட மட்ட, மாகாண மட்ட, தேசியமட்ட சாதனைகளை நிலைநாட்டியவர்கள் என்பதுடன் பிராந்திய கல்வி மேம்பாட்டுக்கு பல்வேறு வகையிலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் எம்.ஐ.எம். வலீத் அவர்களின் புதல்வியுமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :