எனவே கிடைத்துள்ள சிறந்த சந்தர்ப்பத்தை நாங்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா தெரிவித்தார்.
தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு நிலையமும் இணைந்து நடாத்தும், ஊழியர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள, கற்கை நெறிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, ஊழியர் மேம்பாட்டு நிலைய பணிப்பாளர் கலாநிதி எச்.எம். நிஜாம் தலைமையில் 2024.08.26 ஆம் திகதி தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கற்கைநெறியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பேராசிரியர் முஸ்தபா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் திட்ட இணைப்பாளர் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச். நபாரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் முஸ்தபா, மாணவர்களுக்கான தரமான கல்வியை வழங்க முயலும்போது அவர்கள் சார்ந்த மொழியின் ஊடாக குறித்த விடயம் அவர்களுக்கு சென்றடையுமாக இருந்தால் மிக இலகுவாக புரிந்துகொள்ளகூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்றும் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகம் இந்த கற்கை நெறிக்காக சுமார் இரண்டு மில்லியன் ரூபாய்கள் பணத்தை செலவிடுகின்றது எனவே பல்கலைக்கழகத்தின் எதிர்பார்ப்பு நிறைவேற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணைப்பாளர் தேசகீர்த்தி தங்கராஜ் கல்யாணி, கற்கைகள் மற்றும் ஆராய்ச்சி பிரிவின் அலுவலர் ஜெ. பாலரஞ்சனி ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுடீன், தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வளவாளர்கள் மற்றும் கற்கையை தொடரும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment