மு.கா வின் உச்சபீடத்தில் இருந்து ஹரீஸை இடைநிறுத்தும் தீர்மானம் வாபஸ்; செயலாளர் நிஸாம் காரியப்பர் அறிவிப்பு



அஸ்லம் எஸ்.மௌலானா-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீடத்தில் இருந்து அக்கட்சியின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸை இடைநிறுத்தும் தீர்மானம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் ஹரீஸ் எம்.பி. மீண்டும் கட்சியின் பிரதித் தலைவராக செயற்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட உச்ச பீடக் கூட்டம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் புதன்கிழமை (28) மாலை மருதமுனை தனியார் விடுதியில் இடம்பெற்றது.

கட்சியின் உயர்பீட அங்கத்துவத்தை இடைநிறுத்தி அனுப்பப்பட்ட கடிதத்திற்கு ஹரீஸ் எம்.பி சத்தியக் கடதாசி மூலமாக தலைவருக்கு அனுப்பியிருந்த பதில் இதன்போது ஆராயப்பட்டது.
அதில் அவர் மிகத் தெளிவாக கூறியுள்ள விடயம் யாதெனில், தான் 2024.08.04 ஆம் திகதி கூடி உச்ச பீடம் எடுத்த முடிவுடன் முற்று முழுதாக இருப்பதாகவும் தனக்கு இது சம்பந்தமாக எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் தெளிவாக தெரிவித்துள்ளார்.
தனக்கு ஆரம்ப இரண்டு வாரங்களாக சஜித் பிரேமதாசவுடைய பிரச்சாரக் கூட்டங்களுக்கு வர முடியாமல் போனதற்கு காரணம் தன்னுடைய சுகவீனம் என்று தெரிவித்துள்ள ஹரீஸ் அதை நிரூபிப்பதற்கு ஒரு வைத்திய அத்தாட்சிப் பத்திரத்தை இணைத்து அனுப்பியுள்ளார்.

மேலும், அதற்குப் பிற்பாடு நடத்தப்பட்ட சஜித் பிரேமதாஸவின் சகல பிரச்சாரக் கூட்டங்களுக்கும் ஹரீஸ் தொடர்ச்சியாக கலந்து கொண்டிருந்தார்.

இதன் அடிப்படையில் அவரால் அனுப்பப்பட்ட சத்திய கடுதாசியை ஆராய்ந்த உயர்பீடம், ஹரீஸின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அவரை உயர் பீத்தில் இருந்து இடைநிறுத்தும் தீர்மானத்தை நீக்கிக் கொண்டதாக மு.கா செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :