அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் மற்றும் சாளம்பைக்கேணி பிரதேசங்களில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பினால் நீர் இணைப்புக்கள் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நீர் இணைப்புக்கள் வை.டப்ளியு.எம்.ஏ. பேரவையின் ஒருங்கிணைப்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும்,கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூரினால் நீர் இணைப்புக்கள் பயனாளர்களுக்கு நேற்று(14)கையளிக்கப்பட்டது.
இதன்போது நாவிதன்வெளி அமைப்பாளர் ஏ.சீ.ஏ.நஸார்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் அல்-அமானா சமூக சேவை அமைப்பின் தலைவருமான எம்.பி.நவாஸ்,மத்திய முகாம் பள்ளிவாசல் தலைவர் எம்.கே.பயாஸ்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய முகாம் கிளைக் குழுத் தலைவர் நெளபர், சாளம்பக்கேணி-04 கிளைக் குழுத் தலைவர் ஆர்.பசில்,சாளம்பக்கேணி-03 கிளைக் குழு உறுப்பினர் ஏ.அப்துல்லாஹ் மற்றும் ரஹ்மத் மன்சூர் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினருமான எம்.ஜே.எம்.பாயிஸ் மற்றும் பவுண்டேசன் உறுப்பினர்களான எம்.எம்.றியாஸ்,யூ.எல்.ஏ.ஜப்பார்,பயனாளர்கள்,நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.
ரஹ்மத் ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பானது அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு பொது மக்கள் நலன் சார் வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment