ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் உட்பட இருபத்தேழு கட்சிகள் கொண்ட மனிதநேய மக்கள் கூட்டணிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நடைபெற்றது.
இதன் போது ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் தலைவர் முஸ்னத் முபாறக் ஒப்பந்தத்தில் ஒப்பமிடுவதை காணலாம்.
மனித நேய மக்கள் கூட்டணி என்பது முபாறக் அப்துல் மஜீத் தலைவராக இருக்கும் போது ஐக்கிய காங்கிரஸ் கட்சியும் இணைந்து உருவாக்கிய கூட்டணியாகும்.
அண்மையில் ஐக்கிய காங்கிரஸ் கட்சி அதன் அவைத்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் புதிய நிர்வாகம் கூடி தற்போதைக்கு யாருடனும் கூட்டு சேர்வதில்லை என முடிவெடுத்திருப்பதால் ஐக்கிய காங்கிரஸ் கட்சி அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டதை அடுத்து முஸ்னத் முபாறக் தலைமையிலான ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டிணைந்து செயல்படுகிறது. இக்கட்சி 2017ம் ஆண்டு தேர்தல் திணைக்களத்தில் பதிவுக்கு ஒப்படைக்கப்பட்ட கட்சியாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment