இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலினை செப்டம்பர் மாதம் 21ம் திகதி முகம்கொள்ளவிருக்கிறோம். இலங்கையில் ஜனாதிபதித் தெரிவானது நேரடியாகவே நடைபெறுகின்றது. இம்முறை ஜனாதிபதி தேர்தலானது வழமையான முறைமையை விட சற்று அதிகமான எதிர்பார்புடனே பார்க்கப்படுகிறது காரணம் 4 பிரதான வேட்பாளர்கள் பலமான போட்டி மேலும் 39 வேட்பாளர்கலில் யாரும் அறுதிப் பெரும்பாண்மையை பெறத் தவரின் தேர்தல் சட்டங்களில் கூறப்பட்ட விருப்பு முறைமை முதன்முறையாக ஜனாதிபதி தேர்தலில் கணக்கெடுக்கபடலாம் (50% +1) கிடைக்க பெறாவிட்டால்) என எதிர்பார்க்கப்படுகிறது.
எமது நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் முறையானது Majority என்று குறிப்பிடப்படும் ஒரு நடைமுறையாகும். அதாவது பெரும்பான்மையாகக் கிடைக்கும் வாக்குகள் மீது அதிக கவனத்தைச் செலுத்தும் முறையாகும். அவ்வாறில்லாத சந்தர்ப்பத்தில் போட்டியாளர்கள் இருவருக்கிடையில் கடும் போட்டி ஏற்படும் சந்தர்ப்பத்தில் அறுதிப் பெரும்பாண்மையை பெறத் தவரின் வெற்றி வாய்ப்பானது அந்த இருவருடன் இணைந்து போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது.
விருப்பு வாக்கு முறைமை என்றல் என்ன ?
ஒரு தேர்தலில் வாக்காளராது தெரிவு ஒரு வேட்பாளராக இருப்பின் அவரது தெரிவினை வேட்பாளரது பெயர் மற்றும் சின்னங்களுக்கு நேரே X என அடையாளமிடுவதன் மூலமாக தெரியப்படுத்தலாம்.
குறிப்பிட்ட தேர்தலில் மூன்று வேட்பாளர்களை விட அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்களாயின் வாக்காளராது தெரிவு ஒரு வேட்பாளரை விட அதிகமா இருப்பின் இலங்கை தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் தேவையெனில் ஒருவருக்கு அல்லது இரண்டு பேருக்கு அவ்வாறில்லாவிடின், மூவருக்கு தமது விருப்பு வாக்குகளை 1, 2, 3 என்ற அடிப்படையில் குறிப்பிட்டு வழங்க முடியும்.
தேர்தலுக்கு பின் விருப்பு வாக்குகள் கணக்கிடப்படும் முறைமை
வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு வாக்குச் சாவடியின் மூத்த தலைமை அலுவலர்(SPO) பொலிஸ் பாதுகாப்பின் கீழ் குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் மற்றும் பிற அச்சிடப்பட்ட உறைகளுடன் கூடிய வாக்குப் பெட்டி/பெட்டிகளை சேகரித்து வாக்குச் சாவடியின் உதவித்தெரிவத்தாட்சி அதிகாரியிடம்(ARO) ஒப்படைப்பார்.
அரசியல் கட்சிகள் / சுயாதீன குழுக்களுக்கு அறிவிக்கப்பட்ட வாக்கெண்ணும் பணி தொடக்க நேரத்தில் வாக்கெண்ணும் பணி தொடங்கும்.. வாக்கெண்ணும் பணி மாவட்ட செயலகங்களில் (கச்சேரி) அல்லது தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பாடசாலைகள் போன்ற அரச கட்டிடங்களில் எண்ணும் பணி நடத்தப்படும். பொதுவாக ஒரு வாக்குச் சாவடியில் சுமார் 10 வாக்குச் சாவடிகளின் (சுமார் 10000-15000 வாக்குகள் வரை) வாக்குப் பெட்டிகள் எண்ணப்படுகின்றன.
ஒவ்வொரு வாக்கெண்ணும் நிலையத்திற்கும் பொறுப்பாக சிரேஷ்ட கணக்கெடுப்பு அதிகாரி(CCO)இ 8 உதவித்தெரிவத்தாட்சி அலுவலர்கள்(ARO) மற்றும் அவர்களின் உதவி அதிகாரிகள், மற்றும் 16 வாக்குச் சாவடியின் தலைமை அலுவலர்கள் (SPO) என சுமார் 41 ஊழியர்கள் நியமிக்கப்படுர். மேலும் அவர்களோடு சர்வதேச கண்காணிப்பாளர் உள்நாட்டு கண்காணிப்பாளர்களும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் சார்பாக அவதானிக்க கட்சிக்கு தலா 5 முகவர்களை என நியமிக்க அனுமதிக்கப்படுகின்றன. அஞ்சல் வாக்கு எண்ணும் மையங்களுக்கு தலா 2 பார்வையாளர்கள் என வாக்கெண்ணும் நிலையத்தில் காணப்படுவார்கள்.
வாக்கெண்ணும் முறைமை 3 படிமுறைகளில் /கட்டங்களில் இடம்பெறும்
கட்டம் ஒன்று
வாக்குச் சாவடிகளிலிருந்து பெறப்பட்ட வாக்குப் பெட்டிகள் தனித்தனியாக திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு பெட்டியிலும் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டு மீண்டும் வாக்குப் பெட்டிகளில் இடப்படும்.
எண்ணப்பட்ட வாக்குச் சீட்டுகள் பெட்டியில் போடப்பட்டு அவ்வப்போது கலக்கி விடப்படுகின்றன. பிழையாக அல்லது முறையற்ற முறையில் அளிக்கப்பட வாக்குகள் நிராகரிக்கப்பட்டு அணைத்து அதிகாரிகளின் கண்காணிப்பின்கீழ் வாக்குப்பெட்டிகளிலிருந்து நீக்கப்படும். பின்னர் மீண்டும் அனைத்து வாக்குப் பெட்டிகளும் திறக்கப்பட்டு மீண்டும் வாக்குச் சீட்டுகள் எண்ணப்படும்.
கட்டம் இரண்டு
இரண்டாம் கட்டத்தின் 1 வது துணை கட்டத்தில் வாக்கு பெட்டிகள் உள்ள வாக்கெண்ணும் எண்ணும் அதிகாரிகள் அமர்ந்திருக்கும் மேசையில் கொண்டு வரப்படும். பின்னர் அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு கட்சி மற்றும் குழுவின் சின்னங்களின் /அடையாளங்களின்படி வாக்குச் சீட்டுகளை வேறுபடுத்தி ஒவ்வொரு கட்சி / குழுவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகளில் / கொள்கலனில் வாக்குச் சீட்டுகள் போடப்படும்.
இரண்டாம் கட்டத்தின் 2 வது துணை கட்டத்தில் வாக்கெண்ணும் மேசைகளை 5 பகுதி/குழுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு கட்சிக்கும் / குழுவிற்கும் அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள தனித்தனியாக எடுக்கப்பட்டு அடுத்த குழு அதிகாரிகள் வரிசைப்படுத்தப்பட்ட மேசைக்கு வாக்குச் சீட்டுகளை மீண்டும் அனுப்பப்பட்டு எண்ணப்படும். பின்னர் அடுத்த குழு அந்த வாக்குச் சீட்டுகளை 50 பகுதியாக பிரிக்கப்பட்டு பெட்டிகளில்;/கொள்கலனில் இடப்படும்.
ஒவ்வொரு பெட்டிகளில்/கொள்கலனிலும் உள்ள வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை எண் மற்றும் குறியீட்டைச் சரிபார்க்கப்பட்டு மீண்டும் எண்ணப்படும். பின்னர் ஒவ்வொரு கட்சி / குழுவும் வாக்களித்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டு முடிவு பெறப்படுகிறது. அணைத்து அதிகாரிகள் கட்சி பிரதிநிதிகள் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் இடெம்பெறும் .
வாக்கெண்ணும் முகவர்கள் மறு எண்ணுவதற்கு கோரினால் இரண்டு மறு எண்ணிக்கைகள் நடாத்தப்படும். ஒவ்வொரு கட்சி / குழுவால் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அறிக்கைகளாக தயாரிக்கப்பட்டு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் கீழ் நிறுவப்பட்ட முடிவுகளை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தும் நிலையதில் ஒப்படைக்கப்படுகிறது
மூன்றாம் கட்டம்
தேர்தலில் யாரும் 50% +1 வாக்கினை எவரும் பெறவில்லை எனின் 3ம் கட்டத்திட்கு வாக்கெண்ணும் முறை செல்லவேண்டி வரும்.
விருப்பு வாக்கெடுப்பில் 2ம் கட்டத்தில் அதிக வாக்குப் பெற்ற முதலிரு வேட்பாளர்கள் தவிர்த்த ஏனைய வேட்பாளர்கள் தேர்தல் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு நீக்கப்பட்ட வேட்பாளர்களின் (37 பேரின்) விருப்பு வாக்குகளில் 2ம் கட்டத்தில் அதிக வாக்குப் பெற்ற முதலிரு வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட விருப்பு வாக்குகள் மட்டும் கணக்கிடப்படும்
ஒவ்வொரு கட்சி / குழுவின் வாக்குச் சீட்டுகள் தனித்தனியாக எடுக்கப்பட்டு 2ம் விருப்பத்தேர்வுகள் , 3ம் விருப்பத்தேர்வுகள் கணக்கிடப்பட்டு தாள் வடிவங்களில் குறிக்கப்படுகின்றன. விருப்பங்களை குறித்த பிறகு இரண்டு விபரச்சுருக்கம் தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. கிடைக்கப் பெற்ற அனைத்து வேட்பாளர்களின்(37 பேரின்) விருப்பங்களும் கணக்கிடப்பட்டு எண்ணிக்கையிடப்படும்.
ஒவ்வொரு கட்சி / குழுவால் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் மற்றைய கட்சி / குழுவால் பெறப்பட்ட விருப்புவாக்குகளின் எண்ணிக்கை இரண்டு அறிக்கைகளாக தயாரிக்கப்பட்டு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் கீழ் நிறுவப்பட்ட முடிவுகளை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தும் நிலையதில் ஒப்படைக்கப்படுகிறது.
முடிவுகளின் அறிவிப்பு
முடிவுகள் அட்டவணைப்படுத்தப்பட்டு அனைத்து எண்ணும் மையங்களிலிருந்தும் எண்ணும் அறிக்கைகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்த பிறகு முதலில் ஒவ்வொரு கட்சியும்/குழுவும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. ஏற்கனவே மேலே கூறப்பட்டதுபோல் தேர்தலில் 2ம் கட்டத்தில் யாரும் 50% 1 வாக்கினை எவரும் பெறவில்லை எனின் மட்டுமே 3ம் கட்டத்திட்கு வாக்கெண்ணும் முறை செல்லவேண்டி வரும் அவ்வாறில்லாமல் 2ம் கட்டத்தில் எந்த வேட்பாளராவது அறுதிப்பெரும்பான்மையை பெற்றிருந்தால் ஜனாதிபத ஆணைக்குழு அறியப்படுத்தும.
எவரும் பெறவில்லை எனின வாக்குகளின் எண்ணிக்கையின் தீர்மானிக்கப்பட்டு பின்னர் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு பட்டியல்கள் தயாரிக்கப்படும் முதன்மை இரு வேட்பாளர்களின் வாக்குகளுடன் மற்றைய காட்சிகள் மூலம் கிடைக்கப் பெற்ற விருப்பு வாக்குகளும் சேர்க்கப்பட்டு அதன் பின்னர் இரு வேட்பாளர்களின் கூட்டுத்தொகையில் அறுதிபெருந்பண்மை பெற்ற வேட்பாளரை ஆணைக்குழு ஜனாதிபதியாக அறியப்படுத்தும் .
அவ்வறு எனயோரின் விருப்பம் வாக்குகள் சேர்தும் அறுதிபெரும்பாண்மை கிடைக்காத சந்தர்பத்தில் முதன்மை இரு வேட்பாளர்களின் வாக்குகள் கூட்டப்பட்டு அதன் மொத்த எண்ணிக்கையில் 50% அதிகமாக பெற்ற வாக்காளர் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார்.
ஏதாவது ஒரு காரணத்தால் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வாக்குகளின் எண்ணிக்கை சமமாக இருக்குமாயின், தேர்தல் ஆணைக்குழு சீட்டுக்குலுக்கல் நடத்தி வெற்றியாளரைத் தெரிவுசெய்யும். இதனை முற்றுமுழுதாக தேர்தல் ஆணைக்குழு தமது விருப்பின் அடிப்படையில் நடத்தும் விடயமாகும்.
இதனை இன்னும் விரிவாக பார்க்கப்படவேண்டிய ஒரு விடயமாகும் அனால் குழப்பம் , தெளிவின்மையை கருத்திற்டிக்கொண்டு இதனை இவ்வாறு கூறியிருக்கிறேன். இதற்கன தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழு இணையத்தளம் மற்றும் PAFFREL என்பவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்றதாகும்.
அவ்வறு எனயோரின் விருப்பம் வாக்குகள் சேர்தும் அறுதிபெரும்பாண்மை கிடைக்காத சந்தர்பத்தில் முதன்மை இரு வேட்பாளர்களின் வாக்குகள் கூட்டப்பட்டு அதன் மொத்த எண்ணிக்கையில் 50% அதிகமாக பெற்ற வாக்காளர் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார்.
ஏதாவது ஒரு காரணத்தால் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வாக்குகளின் எண்ணிக்கை சமமாக இருக்குமாயின், தேர்தல் ஆணைக்குழு சீட்டுக்குலுக்கல் நடத்தி வெற்றியாளரைத் தெரிவுசெய்யும். இதனை முற்றுமுழுதாக தேர்தல் ஆணைக்குழு தமது விருப்பின் அடிப்படையில் நடத்தும் விடயமாகும்.
இதனை இன்னும் விரிவாக பார்க்கப்படவேண்டிய ஒரு விடயமாகும் அனால் குழப்பம் , தெளிவின்மையை கருத்திற்டிக்கொண்டு இதனை இவ்வாறு கூறியிருக்கிறேன். இதற்கன தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழு இணையத்தளம் மற்றும் PAFFREL என்பவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்றதாகும்.
1 comments :
இலங்கையின் மிக முக்கியமான தேர்தலான நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு முக்கிய வேட்பாளர்களின் விவரங்களின் கண்ணோட்டம் இது.
ரணில், சஜித், அநுர, நாமல் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?
Post a Comment