ஜனாதிபதி வேட்பாளர் சஜித் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுடன் ஆலையடிவேம்பில் சந்திப்பு



வி.ரி. சகாதேவராஜா-
னாதிபதி வேட்பாளர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசா அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஆலையடிவேம்பில் சந்தித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மாவட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களை ஓரிடத்தில் சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் வெள்ளையன் வினோகாந்தின் அழைப்பின் பேரில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர்சஜித் பிரேமதாச அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை சந்திப்பதற்காக ஆலயடிவேம்பு பிரதேசத்துக்கு வருகை தந்திருந்தார்.

இதில் திருக்கோவில் கோமாரி ஆலையடிவேம்பு வளத்தாப்பட்டி காரைதீவு கல்முனை போன்ற பிரதேசங்களை சேர்ந்த பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டு சஜித் பிரேமதாசவுக்கு சிறந்த தமிழ் கலாச்சார அடிப்படையிலான பரிவட்டம் கட்டிஆரத்தி எடுத்து வரவேற்பினை வழங்கி இருந்தார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் ஆங்காங்கே அதிக மக்கள் வெள்ளம் திரண்டு அவரை சம்மாந்துறை பொத்துவில் அட்டாளச்சேனை போன்ற பகுதிகளில் வரவேற்று நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களை சந்திப்பதற்காக நன்றி விசுவாசமுள்ள ஒரு தலைவனாக அவர் ஆலயடிவேம்பு பிரதேசத்தில் தமிழ் மக்களையும் சந்திக்க வருகை தந்திருந்தது ஒரு சிறந்த அம்சமாகும். அவர் அங்கு அபிவிருத்திகள் தொடர்பாக அதிக விடயங்களை பேசியபோதிலும் குறிப்பாக தமிழ் மக்களின் அபிவிருத்தி தொடர்பான பொறுப்புகளை நிச்சயம் தான் பொறுப்பெடுப்பது கல்வி சுகாதாரம் விவசாயம் தொழில் வாய்ப்பு இளைஞர்கள் தொடர்பான திட்டங்கள் சம்பந்தமாக அதிக விடயங்களை நம்பிக்கை ஊட்டும் வகையில் மக்களிடத்தில் பேசியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அதன் போது தொகுதி அமைப்பாளர் வினோகாந்த் கருத்து தெரிவிக்கையில்..

தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களாகிய திருக்கோவில் ஆலையடிவேம்பு கோமாரி போன்ற பகுதிகளில் அதிக விளைச்சல் காணிகள் நீரின்றி வேளாண்மை செய்யப்படாமல் காணப்படுவது அதிக தொகையான இளைஞர்கள் தொழில் வாய்ப்பின்றி அதிகாலையில் வீதிகளில் கூலித்தொழிலுக்காக அங்கலாய்ப்பது அதிக பெண்கள் தொழில் இன்றி தனியார் கடைகளில் தனியார் நிறுவனங்களில் பணி புரிவது போன்ற விடயங்கள் இருக்கின்றன.

இவற்றுக்கு தீர்வுகளை பெற்று தருவதானால் விளைச்சல் பூமிகளுக்கான நீர் வசதிகள் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு தொழில் பேட்டைகள் தொழிற்சாலைகள் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தல் போன்ற விடயங்களை எதிர்காலத்தில் செய்வதோடு திருக்கோவில் பகுதியில் காணப்படக்கூடிய சட்டவிரோத இல்மனைட் அகழும் செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மலரும் ஆட்சியில் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைத்திருந்தார்.

அத்துடன் மேலும் கருத்து தெரிவித்த அவர் ..

இன்று ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் வேட்பாளர்களில் எத்தனை பேருக்கு தெரியும் பனங்காடு அலிகம்பை ஆலையடி வேம்பு திருக்கோவிலை கோமாரி காயத்ரி கிராமத்தை இந்த பெயர்களை அந்த வேட்பாளர்கள் கேள்விப்பட்டிருக்கவு மாட்டார்கள் .ஆனால் எனது வேட்பாளர் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது அதிக பணிகளை அப்பகுதி மக்களுக்காக செய்திருக்கிறார்.

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :