மார்க்க விழுமியங்களில் பிசகாது எல்லாத்துறைகளிலும் பெண்கள் தாங்களது திறமைகளை பறைசாற்ற வேண்டும்.- பதில் உபவேந்தர் மஜீட்.



ன்றைய சூழலில் பெண்கள் தாங்களது திறமைகளை எல்லாத்துறைகளிலும் முன்னிலைப்படுத்தி வருகின்றனர். திறமைகளை அடையாளப்படுத்துவதில் பெண்கள் காட்டிவரும் அர்ப்பணிப்பானது பாராட்டத்தக்கது. தங்களது மார்க்க விழுமியங்களில் பிசகாது பெண்கள் எந்தத்துறையிலும் முன்னேற முடியும் என்று தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் தமிழ் சங்கம் மற்றும் சமூகவியல் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த புத்தளம் புழுதிவயல் பைஸானா பைரூஸ் எழுதிய ‘டுவன்டி ப்ளஸ் 20+’ கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு, கலை கலாச்சார பீடத்தின் கேட்போர்கூடத்தில் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் தலைமையில் 2024.08.28 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது தென்கிழக்கு பல்கலைகழகத்தில் மட்டுமல்லாது ஏனைய நிறுவனங்களிலும் பெண்களின் பங்கேற்ப்பு அதிகரித்து வருகின்றது. இவர்கள் பல்வேறு துறைகளில் தாங்களது திறமைகளை காட்டிவருகின்றனர். இந்த வகையில் இலக்கிய துறையில் கலை கலாச்சார பீட மாணவியான பைஸானா பைரூஸ் ‘டுவன்டி ப்ளஸ் 20+’ என்ற பெயரின் கவிதை நூல் ஒன்றை எழுதியுள்ளார். இவரது முயச்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. இவ்வாறான செயற்பாடுகளில் ஏனைய மாணவர்களும் தங்களது தடங்களைப் பதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வுக்கு இலக்கிய அதிதிகளாக சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், பேராசிரியர் எஸ்.எம். ஐயூப், கலாநிதி எப். எச்.ஏ. ஷிப்லி மற்றும் விரிவுரையாளர் எம். அப்துல் றஸ்ஸாக் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கௌரவ அதிதிகள் வரிசையில் புவியல் துறை தலைவர் கே. நிஜாமிர், பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறை தலைவர் எஸ். சந்திரகுமார், தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் எம்.எஸ். பாத்திமா பயாஷா ஆகியோரும் விஷேட அதிதிகளாக எம்.டி. தஸ்னீம் முகம்மட் (நளீமி), உஸ்தாத் மின்ஹாஜ் (இஸ்லாஹி), ஏ. மொஹம்மட் இன்ஷாப் மற்றும் ஜெ. மொஹம்மட் இஹ்ஷான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வரவேற்புரையை எஸ்.எம். சஹான் நிகழ்த்தினார். நூல் மற்றும் நூலாசிரியர் பற்றிய அறிமுகத்தை விரிவுரையாளர் எம். அப்துல் றஸ்ஸாக்கும் நூல் பற்றி சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களும் உரையாற்றினர்.

இங்கு மூதூர் ஜெ.எம்.ஐ. பப்ளிகேஷனின் பணிப்பாளர் என். ஆஷா பாலின் நூலின் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் பைஸானா பைரூஸ் நிகழ்த்தினார்.

கஸ்மிகா பாடல் ஒன்றை பாடிய அதேவேளை சபூரா அஹ்மத் பாதுஷா கவிதை ஒன்றை வாசித்தார். நன்றியுரை ஏ. பாத்திமா அம்னாவினால்
 நிகழ்த்தப்பட்டது.






































 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :