2024 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண மட்ட தமிழ் மொழித்தின விழா கல்முனை கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்களின் ஒருங்கிணைப்பில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் அவர்களின் தலைமையில் ( 2024.08.22) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக இந்து ,இஸ்லாமிய , கிறிஸ்தவ கலை கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் நடாத்தப்பட்ட மாணவர் ஊர்வலங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்தன. அத்துடன் போட்டியாளர்களுக்கு வழங்குவதற்காக மென்பானப் பந்தல்,பலகாரப்பந்தல் ,மோர்பந்தல் என்பன அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் பிரமாதமாக இருந்தன.
.இந்நிகழ்வில் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ,கிழக்கு கல்வி வலயங்களின் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் ,பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ,கணக்காளர்கள் ,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள்,வளவாளர்கள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட வலயக் கல்வி அலுவலக கல்விசார் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலாசார உடை அணிந்து கலந்து கொண்டமை விசேடமாக இருந்தது.
0 comments :
Post a Comment