வெல்லும் சஜீத் என்ற தொனிப்பொருளில் பாற்சோறு வழங்கி வைப்பு



பாறுக் ஷிஹான்-
வெல்லும் சஜீத் என்ற தொனிப்பொருளில் எதிர்கால ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாகவும் இன்று வேட்புமனுவில் கைசாத்திட்டதன் ஊடாக எமது மக்களுக்கு எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளவுள்ள சஜீத் பிரேமதாசவினை ஆதரித்து அம்பாறை மாவட்டம் புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் இன்று(15) ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி இணையமைப்பாளரும் கிழக்கு மாகாண ஐக்கிய மக்கள் சக்தியின் கல்வி அபிவிருத்தி குழு இணைப்பாளரான வெள்ளையன் வினோகாந் தலைமையில் பாற்சோறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது வெடிகள் கொளுத்தபட்டு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளரும் அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தருமான சந்திரதாச கலப்பதி கலந்து கொண்டு பொதுமக்கள் வீதியில் செல்வோர் உள்ளிட்டோருக்கு பாற்சோறு வழங்கி வைத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்கட்சி தலைவர் நாளைய ஜனாதிபதி சஜித் பிரேமதாச அவர்கள் இன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலில் கைச்சாத்திட்டிருக்கின்றார்.இதனை எம் மக்களுக்கு தெரியப்படுத்த நாடு பூராகவும் பட்டாசுகளை கொளுத்தி பாற்சோறுகளை வழங்கி வருகின்றோம்.கடந்த 5 ஆண்டுகள் இலங்கை மக்களுக்கு கசப்பான வருடங்களாக கடந்து விட்டன.இந்த இருண்ட தினத்தை வெளிச்சமாக்கி மக்களை சந்தோசப்படுத்துவதற்காக சஜீத் பிரேமதாச வந்திருக்கின்றார்.இன்று அவரை பஸ் மனிதன் என கூறுகின்றார்கள்.அவரை எவரும் கள்ளன் என்று கூறவில்லை.எனவே எதிர்வரும் ஜனாதிபதியாக அவரை அனைவரும் ஆக்க முன்வாருங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி இணையமைப்பாளரும் கிழக்கு மாகாண ஐக்கிய மக்கள் சக்தியின் கல்வி அபிவிருத்தி குழு இணைப்பாளரான வெள்ளையன் வினோகாந் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :