தம்பதெனிய அல் ஹிஜ்ரா வித்தியாலயத்தில் குவைத் அரசின் இலங்கைக்கான குவைத் துாதுவர் காலிப் எம்.எம். பு தாஹிர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் குவைத் நன்கொடையாலரின் நிதிஉதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் நேற்று 17 திறந்து வைக்கப்பட்டது..
இத் திட்டத்தினை அல் ஹிமா இஸ்லாமிக் சேவிஸ் பணிப்பளார் அஷ்ஷேக் எம்.ஏ.ஏ.நுாறுல்லாஹ் அவர்களினால் நாடு முழுவதிலும் பாடசாலைகளில் வகுப்பறைக் கட்டிடஙகளை நிர்மாணிக்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வுகள் கல்லுாாி அதிபர் கலாநிதி எம்.எஸ்.எப் சிபானா தலைமையில் நடைபெற்று வருகின்றது.
பிரதம அதிதியாக ஜாமியா நளீமியா கலாபீடத்தின் முதல்வர் அஷ்ஷேக் ஏ.சி.அகார் முஹம்மத் கலந்து கொண்டார் .அத்துடன் குவைத் தூதுவராலயத்தின் அதிகாரி அஷ்ஷேக் எம்.பிர்தவுஷ் (நளிமி) கலந்து கொண்டு இக் கல்லூரி 75 வது பவள விழா நிகழ்வின் போது இக் கட்டிடம் திற்நது வைக்கப்பட்டது.
அதிபர் அங்கு உரையாற்றுகையில் தம்பதெனியா அல் ஹிஜ்ரா பாடசாலை 75 ஆண்டுகளை பூரணப்படுத்தியும் பௌதீக வளம் குறைந்ததொரு பாடசாலையாக காணப்பட்டு வருகின்றது. இத்தருனத்தில் இவ்வாறானதொரு கட்டிடம் கிடைக்க பெற்றதையடுத்து இப்பிரதேச வாழ் மக்கள் மற்றும் பாடசாலை ஆசிரிய மாணவர்கள் அதிபர் குவைத் துாதுவர்,நன்கொடையாளர் மற்றும் இத் திட்டத்தை அமுல்படுத்தும் நுாறுல்லாஹ் நளிமி அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment