கல்முனையை நோக்கி பயணித்த விவசாயியொருவர் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திற்கு முன்பாக கனரக வாகனமொன்றில் மோதுண்டு பலியாகியுள்ளார். இச் சம்பவம் புதன் கிழமை (14) காலை இடம்பெற்றது.
கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவர் சம்மாந்துறை கைகாட்டி, கல்லரிச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் றமீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார் தனது வயலில் சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெறுவதால் நெல்லை உலர்த்துவதற்காக படங்குகளைப் பெறுவதற்காக கல்முனைக்கு செல்லும் வழியிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment