முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் தேசிய நல்லிணக்கத்துக்கான முன்னோடி வேலை திட்டமொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையளிப்பு!



அஸ்ஹர் இப்றாஹிம்-
ற்பத்தி திறன் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சரும், புத்திஜீவியுமான பஷீர் சேகுதாவுத் தேசிய நல்லிணக்கத்துக்கான முன்னோடி வேலை திட்டம் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மேலான நடவடிக்கைக்கு சமர்ப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து பஷீர் சேகுதாவூத் நல்லெண்ண சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

அப்போதே அனுராதபுரத்தை பிரதான தலைமை நகரமாக மையப்படுத்தி இலங்கையில் உள்ள உலர் வலய பிரதேசங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக கடலோர புகையிரத திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நிபுணத்துவ ஆலோசனையை ஜனாதிபதியிடம் இவர் முன்வைத்துள்ளார்.

உலர் வலய பிரதேசங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக கடலோர புகையிரத திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமூக - பொருளாதார மேம்பாடு, சுற்று சூழல் பாதுகாப்பு, இயற்கையோடு இணைந்த வாழ்வியல், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டவும், கட்டியெழுப்பவும் முடியும் என்று இவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்று முக்கியத்துவமும், கலாசார பாரம்பரிய பெருமையும், ஆன்மீக மகிமையும், சகவாழ்வின் மேன்மையும்,நிறைந்த அனுராதபுரத்தை தலைமை நகரமாக கொண்டு இவ்வேலை திட்டம் முன்னெடுப்படுவதை நாட்டின் எல்லா இன மக்களும் நிரந்தர சமாதானம், நீடித்த அபிவிருத்தி ஆகியவற்றுக்கான திறவுகோலாக பார்ப்பார்கள் என்று இவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வனஜீவராசிகளின் இயற்கை சரணாலயமாக விளங்குகின்ற உலர் வலயத்தை மையப்படுத்திய இவ்வேலை திட்டம் மூலம் சுற்றுலா துறையை மேம்படுத்த முடிவதுடன் மேல் மாகாணத்துக்கும், உலர் வலயத்துக்கு இடையில் நிலவி வருகின்ற பொருளாதார ஏற்ற தாழ்வுகளை களைய முடியும் என்பதும் இவருடைய வேலை திட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும்.

வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றுக்கு ஊவா மாகாணத்தில் பதுளையில் அமைந்துள்ள ஹப்புத்தளை நகரத்தில் இருந்து சுற்று சூழலுக்கு உகந்த வகையில் புகையிரத பாதைகள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்கிற இவரின் வேலை திட்டம் உண்மையிலேயே தூர நோக்கு உடையது என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :