கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த மஹ்மூத் மாணவிகள் கௌரவிப்பு !



நூருல் ஹுதா உமர்-
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க போட்டிகள் ஜூலை 27,28,29ஆம் திகதிகளில் திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த போட்டி நிகழ்ச்சிகளில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகள் 20 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தையும் 17 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் ரன்னர்-அப் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணமட்ட சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை தேசிய மட்ட போட்டிகளுக்கு ஊக்கப்படுத்தி கெளரவப்படுத்தும் நோக்கில் மஹ்மூத் மகளிர் கல்லூரி சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வு புதன்கிழமை, (31.ஜூலை,2024) கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் கல்முனை வலய கல்வி பணிமனையின் உடற்கல்வி பொறுப்பான உதவி கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முதர்ரீஸ், விஷேட அதிதியாக கல்முனை வலய கல்வி பணிமனையின் உடற்கல்வி ஆசிரிய வளவாளர் ஏ. முகம்மது அன்சார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சதுரங்க வரலாற்று சாதனை படைத்த மஹ்மூத் மாணவிகள் கல்லூரி முன்றலில் பூ மாலை அணிவிக்கப்பட்டு இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டதுடன் வெற்றி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டதுடன் உடற்கல்வி பாட ஆசிரிய, ஆசிரியைகள் அதிதிகள் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உதவி அதிபர்களான என்.டி. நதீகா, எம்.எஸ். மனுனா, பொறுப்பாசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், பகுதித்தலைவா்கள் ஆசிரியா்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், மாணவிகளின் பெற்றோா்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :