சிஸ்டம் சேன்ஞ்யை செய்து காட்டியவர் சஜித் பிரேமதாச என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். திங்கள்கிழமை காலை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கு கொண்ட கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று எல்லாரும் கேட்கும் விடயம் சிஸ்டம் சேன்ஞ்.இவர்கள் மேடைகளில்,போராட்ட்ங்களில் சிஸ்டம் சேன்ஞ் பற்றி பேசினாலும் தேர்தல் என்ற ஒன்று வரும் போது அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஜனாதிபதி வேட்பாளர்களிலே சிஸ்டம் சேன்ஞ்யை செய்து காட்டியவர் சஜித் பிரேமதாச மட்டுமே. நாம் வரலாற்றில் பல எதிர்கட்சி தலைவர்களை கண்டுள்ளோம். அவர்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தை விமர்ச்சிக்கவும் அரசாங்கத்தை கவிழ்க்க என்ன செய்யலாம் என யோசித்தே நாம் கண்டுள்ளோம். ஆனால் வரலாற்றில் முதன்முறையாக அந்த சிஸ்ட்டத்தை மாற்றியவர் எமது தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே.
கொவிட் பிரச்சினையாக இருந்தாலும் சரி பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும் சரி அவர் விமர்சன அரசியலை விட்டுவிட்டு சேவை அரசியலை முன்னெடுத்தார்.அந்த சிஸ்ட்டத்தை மாற்றினார். அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து பாடசாலைகளுக்கு உதவ முடியுமாக இருந்தால், வைத்தியசாலைகளுக்கு உதவ முடியுமாக இருந்தால் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் எவ்வாறான அபிவிருத்தியையும் சிஸ்டம் சேன்ஞ்யையும் கொண்டு வர முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்
0 comments :
Post a Comment