அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் "அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு"



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு "புதிய யுகம் நோக்கிய பயணம்" எனும் தொனிப் பொருளில் சாய்ந்தமருது பௌசி மைதானத்தில் நாளை மறுநாள் சனிக்கிழமை (24) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் மயோன் கல்வித் திட்ட, சமூக அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபா தலைமையில் இடம்பெறும் இந்த இளைஞர் மாநாட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான அமீர் அலி கௌரவ அதிதியாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் அம்பாறை மாவட்ட செயற்குழு தலைவருமான அப்துல் ரசாக் ஜவாத், அ. இ. ம. கா. தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அ. இ. ம. கா. பிரதி தேசிய அமைப்பாளர் அஷ்ரப் தாஹீர், அ. இ. ம. கா. சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஐ.எல்.எம். மாஹீர், அ. இ. ம. கா. பிரதிச்செயலாளர் நாயகம் அன்சில் அல் - அமீரி, அ.இ.ம.கா பிரமுகரும் முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ள மாபெரும் ஒன்றுகூடல் மாநாட்டில் பல பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகள், பாராட்டு நிகழ்வுகள் என மேடையை அலங்கரிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :