நாட்டில் இனவாதத்தினை உருவாக்கி ஆட்சிக்கு வந்தவர்கள் எல்லோரும் அழிந்து போன வரலாற்றை நாம் கண்டுள்ளோம்.-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளர் உதுமாலெவ்வை



கே எ ஹமீட்-
மது நாட்டின் அரசியல் வரலாற்றைப் பின்நோக்கிப் பார்க்கும் போது இனவாதத்தினை உருவாக்கி ஆட்சிக்கு வந்தவர்கள் எல்லோரும் அழிந்துபோன வரலாற்றை நாம் கண்டுள்ளோம். எனவே, நாட்டின் நலனையும் எதிர்காலத்தையும் நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாசாவின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஈடுபடவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்களின் விசேட கூட்டம் முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினர் நசீர் தலைமையில் ஏறாவூர் நகரில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் றஊப் ஹக்கீம் , பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், எம்.எஸ்.எம்.தௌபீக் , முன்னாள் அமைச்சர் எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாஹ் கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் , முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில்

கடந்த 2015ம் ஆண்டில் இரண்டு வருடங்கள் தனது பதவிக்காலம் இருக்கத்தக்க வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடிரென ஜனாபதித் தேர்தலை நடாத்தினார். அப்போதைய காலகட்டத்தில் நாம் தேர்தலுக்குச் சென்றால் தோல்வியடைவோம் என ஆலோசனைகளை வழங்கியபோதும் நான் தேர்தலை நடத்தியே தீருவேன் எனக்கூறி ஜனாதிபதி தேர்தலை நடத்திய போது அவருடைய கட்சியின் செயலாளராக பதவி வகித்த மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

2020ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இனவாதத்தினை உருவாக்கி முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மை சமூகத்திடம் வெறுப்பாகக் காட்டி 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் இரண்டரை வருடங்கள் இருக்கத்தக்கதாக தரையில் சில காலமும் நீரில் சில காலமும் ஒளிந்து வாழ்ந்து நாட்டை விட்டு தப்பி ஓடினார். அதன் பிறகு ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் இனவாதிகளால் திட்டமிடப்பட்டு உடைக்கப்பட்ட அம்பாறை பள்ளிவாசலை பார்வையிட வருவதாக அன்று பிரதமராக பதவி வகித்த திரு.ரணில் விக்கிரமசிங்க அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்து இனவாதிகளால் உடைக்கப்பட்ட அம்பாரை மாவட்ட பள்ளிவாசலினை பார்வையிடாமல் ஒலுவில் விடுதியில் தங்கிவிட்டு சென்ற வரலாற்றையும் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மறந்துவிடக்கூடாது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நமது நாட்டுக்கான தலைவரைத் தெரிவு செய்யும் ஜனாதிபதித்; தேர்தல் நடைபெறவுள்ளது. மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்தி வாக்குகளைப் வழங்கி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கும் அரசாங்கத்தை அமைப்பதற்கும் வித்திட்டார். இதனூடாக நமது சமூகம் தொடர்பான விடயங்களும் நிறைவேற்றப்பட்டன.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் திரு.சஜித் பிரமேதாசாவை ஆதரிப்பது தொடர்பாக கட்சியின் உச்சபீடம் நீண்ட நேரம் ஆலோசித்து வாதப் பிரதிவாதங்கள் நடத்தி நமது சமூகம் தொடர்பான விடயங்களை முன்னிறுத்தி சஜித் பிரமேதாசாவிற்கு ஆதரவு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

நமது முஸ்லிம் காங்கிரஸும் நமது கட்சியின் தலைவரும் சஜித் பிரமேதாசாவிற்கு ஆதரவு வழங்குவதனாது நாட்டில் வாழும் பெரும்பான்மையான இன மக்களுக்கு மத்தியில் பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரமேதாசாவை வெற்றியடையச் செய்வதில் அர்ப்பணிப்புடன் தியாகத்துடன் செயற்படவேண்டும் எனக் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :