குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹலாஃப் பு தாய்ர் அவர்களின் விஷேட அழைப்பின் பேரில்,கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும்,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் கடந்த செவவாய்க்கிழமை (20)சந்தித்தார்.
இதன்போது கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டத்தின் பொது மக்கள் தேவைப்பாடுகள் தொடர்பில் இதன் போது தூதுவரிடம் ரஹ்மத் மன்சூர் தெரிவித்துடன் இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக தூதுவர் உறுதியளித்ததாக ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.
மேலும் கடந்த காலத்தில் குவைத் அரசாங்கத்தின் மூலம் தென் கிழக்கு பல்கைக்கழகத்தில் இடம் பெற்ற உதவி திட்டங்களுக்கு இதன் போது நன்றியினை ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார் .
தனது புதல்வரும், இளம் தொழிலதிபருமான அக்கீல் அப்துர் ரஹ்மானும் இச்சந்திப்பின்போது கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment