உலக மக்களுக்காக இ.கி.மிஷன் கல்லடியில் வழிபாடு



வி.ரி. சகாதேவராஜா-
லக மக்கள் நன்மை கருதி இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் கல்லடியில் சிறப்பு பிரார்த்தனையும் வழிபாடும் நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடி அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் திருச்சடங்கு பூஜைகளின் முதல் நாள் பூஜையின்போது இவ்வழிபாடு உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் தலைமையில் நடைபெற்றது.

பாரம்பரிய முறைப்படி முதல் பூஜையை ராமகிருஷ்ணபுரம், ராமகிருஷ்ண மிஷன் துறவியர்களும் பக்தர்களும் மாணவர்களும் மேளதாளம் முழங்க கோவிலுக்கு சென்று வழிபாடுகளை நடத்தினர்.

அவர்கள் உலக மக்களுக்காக பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :