மருதமுனை நூலகத்தில் "வாசிக்கும் மலர்கள்" சிறுவர் நிகழ்வு



அஸ்லம் எஸ்.மெளலானா-
ருதமுனை பொது நூலகத்தில் "வாசிக்கும் மலர்கள்" எனும் சிறுவர் சிறப்பு நிகழ்வு வியாழக்கிழமை (29) பிற்பகல் நூலகர் ஹரீஷா சமீம் தலைமையில் நடைபெற்றது.

சிறுவர்களின் கல்வி மற்றும் அறிவை விருந்தி செய்யும் வகையில் கல்முனை மாநகர சபை நிர்வாகத்திற்குட்பட்ட நூலகங்களில் சிறுவர் பகுதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் விடுத்திருந்த அறிவுறுத்தலுக்கு அமைவாக உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் நூலகங்களின் செயற்பாட்டினை வினைத்திறன் மிக்கதாகவும் சிறுவர்களை வாசிப்ப்பின்பால் ஈர்ப்பதற்காகவும் சிறுவர்களை, நூலகத்தோடும் நூல்களோடும் தொடர்பு படுத்துவதற்காவும் தமது நூலகத்திற்கு வருகைதந்து வாசிக்கும் ஒரு தொகுதி சிறுவர்களை ஒன்றினைத்து இந்த சிறப்பு நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதன்போது தாம் வாசித்த கதைகள், நகைச்சுவைகள், பாடல்கள் மற்றும் அறிவுசார் தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

சிறுவர்களை கவர்ந்து மகிழ்வுறச் செய்த இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு நூலக உத்தியோகத்தர்கள் அன்பளிப்பு பொதிகளுடன், இனிப்புகளையும் வழங்கி பாராட்டி கௌரவித்தனர். இந்த நிகழ்வுக்கு MACHO எனும் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :