நிந்தவூர் சிரேஷ்ட நில அளவையாளர் றபீக் உயர் பதவிக்கு நியமனம்!



நிலஅளவை திணைக்களத்தின் உயர் பதவியை அலங்கரிக்கும் முதலாவது முஸ்லிம் உத்தியோகத்தர் எனும் பெருமையை நிந்தவூரைச் சேர்ந்த சிரேஷ்ட நில அளவையாளர் எம்.ரீ.எம். றபீக் சுவீகரித்துக் கொண்டார்.

நிந்தவூரைச் சேர்ந்த சிரேஷ்ட நில அளவையாளர் எம்.ரீ.எம். றபீக், தியதலாவையில் அமைந்துள்ள Institute of Surveying and Mapping இல் தனது BSC பட்டத்தை நிறைவு செய்து கொண்ட இவர், MSc பட்டத்தினை Gio Informatic துறையில் நெதர்லாந்தில் அமைந்துள்ள டொரன்டோ பழ்கலைக்கழகத்தில் நிறைவு செய்து கொண்டார். தியத்தலாவை Institute of Surveying and Mapping நிறுவனத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், அம்பாரை மற்றும் பொலநறுவை மாவட்டங்களில் Surveyor Superintendent ஆகவும் கடைமையாற்றியிருந்தார்.

தற்போது இவர் கிழக்கு மாகாணத்தின் Deputy Surveyor General ஆக பதவியுயர்வு பெற்று இலங்கை நில அளவை திணைக்களத்தின் உயர் அதிகாரியாக இன்று (12) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நில அளவை திணைக்களத்தில் உயர் பதவியை அடைந்திருக்கும் முதலாவது முஸ்லிம் உத்தியோகத்தர் எனும் பெருமையை நிந்தவூர் மண்ணிற்கு பெற்றுத் தந்திருக்கின்ற இவர் கடந்த காலங்களில் சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும், சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்களில் அக்கறையுடன் செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட நில அளவையாளர் எம்.ரீ.எம். றபீக், தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரீ.எம். தாஜுடீனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :