வரலாற்றில் மிகவும் குறைந்த 12 முறைப்பாடுகள்! பவ்ரல் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சத்தியநாதன் தகவல்!



வி.ரி.சகாதேவராஜா-
ம்பாறை மாவட்ட தேர்தல் வரலாற்றில் மிகவும் குறைந்த 12 முறைப்பாடுகள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப்பட்டுள்ளது என்று
பவ்ரல் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக தமிழர் பகுதிகளில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு வீதம் காலையில் குறைவாக காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
அதேவேளை ஏனைய முஸ்லிம் சிங்கள பகுதிகளில் காலையிலேயே கூடுதலான மக்கள் வாக்களித்ததை காண முடிந்தது என்றார் .

பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் நேற்று காலையில் சேவைக்குடியிருப்பு பவ்ரல் சேவோ தலைமையகத்தில் போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு ஆரம்பமாகியது.

அதேவேளை பெரிய நீலாவணையில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரின் பிரசுரங்கள் விநியோகம் இடம்பெற்றதை நேரடியாக காணக்கூடியதாக இருந்தது .அதனை சென்று தடுத்திருந்தோம்.
அதேவேளை எமது குழுவினர் திருக்கோவில் பிரதேசத்திற்கு சென்ற பொழுது அங்கே தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் அகற்றப்படாமல் இருந்ததை அங்கே அவதானிக்க முடிந்தது.

எமது பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் சகல பகுதிகளிலும் சென்று தேர்தலை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வந்தனர் என்றும் தெரிவித்தார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :