அனைத்து விதமான புலனாய்வுத்துறை ஆய்வுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தி 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறும்.- சஜித் பிரேமதாச



நாட்டைச் சீரழித்த ராஜபக்சர்களுடன் ரணில் அநுரவுக்கு தொடர்பிருந்தாலும் எமக்கு திருடர்களுடன் தொடர்பில்லை.

னைத்து விதமான புலனாய்வுத்துறை ஆய்வுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியும் தானும் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவோம் என்பது உறுதியாகி இருக்கின்றது. இது யதார்த்தமான உண்மைப்படுத்தப்பட்ட விடயமாகும். இந்த உண்மையும் நம்பிக்கையும் நாடு பூராகவும் பரவி இருக்கின்றது. எனவே இந்த வெற்றியை சமாதானமாகவும் பணிவாகவும் ஒற்றுமையை பாதுகாத்துக் கொண்டாட வேண்டும். தற்பொழுது அநுர ரணில் ஆகியோரின் டீல் தோல்வியடைந்திருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 72 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 18 ஆம் திகதி கொழும்பில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாற்றுக் கருத்தோடு இருக்கின்றவர்களை பாதுகாத்து ஒருமைப்பாட்டோடும் சகோதரத்துவத்துடனும் நட்புடனும் மிகப்பெரிய சக்தியாக மாற்றிக்கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இதில் ஒரு பக்கம் தன்னை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சியில் ரணில் மற்றும் அநுர இணைந்த கூட்டமைப்பு அரச ஊடகங்களை பயன்படுத்தி தன்னை இம்சித்து வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவர்கள் பொருளாதார மேம்பாடு என்று கூறி பொருளாதாரத்தை சுருக்கி அசௌகரியத்தையும் அழுத்தங்களையும் திணித்து அனைத்தும் சாதாரணமானவை என்று குறிப்பிட்டாலும், வறுமை அதிகரித்து வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்து முழு நாடும் அனாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் ஊழலை செய்து தரகு பணத்தை பெற்றுக் கொள்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

பைல்களை காட்டி திருடர்களை பிடிப்பதாக கூறி அநுர அதிகாரத்தை கோரினாலும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாமே திருடர்களை பிடித்தோம்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம். உண்மையான மனிதநேயமிக்க யுகத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்யுங்கள். பைல்களை காட்டி திருடர்களை பிடிப்போம் என்று அதிகாரத்தை அநுர குமார திசாநாயக்க கோரினாலும், ஐக்கிய மக்கள் சக்தியே எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு திருடர்களை பிடித்தது. திருடர்களை பிடிப்பதற்கு அதிகாரம் தேவையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


கூலிக்காக நான் ராஜபக்ஷக்களுக்கு அடிபணியவில்லை.

நான் கூலிக்காக அரசியல் செய்யவில்லை ராஜபக்ஷக்களை பாதுகாத்தது ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்கவை ராஜபக்ஷக்கள் தான் முன்மொழிந்தார்கள். இவர்கள் இருவரும் ராஜபக்ஷக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள். ராஜபக்ஷக்களுடன் டீல் இல்லாத காரணத்தினால் அன்று நான் அதிகாரத்தை பொறுப்பெடுக்கவில்லை. இந்த தேர்தலின் ஊடாக மக்களைப் பொறுப்பேற்று பொறுப்புக் கூறக்கூடிய பொது மக்களின் யுகத்தை உருவாக்குவோம். நாட்டை வெற்றியடையச் செய்யும் புதிய புரட்சிகரமான பயணம் ஒன்றை மேற்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக கடமைகளை பொறுப்பேற்பது என்பது 24 மணித்தியாலமும் மக்கள் மீதான பொறுப்புக்களை ஏற்று, மக்களுக்கு பொறுப்பு கூறும் வகையில் முறையான அரசாங்கத்தை முன்னெடுப்பதாகும். அனைத்து அரச கொடுக்கல் வாங்கல்களையும் முறையாக மேற்கொள்வதோடு அனைத்து செயல்பாடுகளையும் டிஜிட்டல் முறைப்படுத்துவோம். கொள்வனவு முறைகளை முறையாக முன்னெடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :