" 2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்



க.கிஷாந்தன்-
லங்கை நாட்டின் 09 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பானது இன்றைய தினம் (21) காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 04 மணி வரை இடம்பெறவுள்ளது

அந்தவகையில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

கொத்மலை - வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, குறித்த வாக்களிப்பு நிலையத்திற்க்கான தனது முதலாவது வாக்கினை காலை 07 மணிக்கு செலுத்தினார்.

அமைச்சர் அவர்கள் வாக்களித்தப் பின்னர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...

நாட்டினது எதிர்காலத்தினையும், மக்களினதும் எதிர்காலத்தினையும் கருத்திற்கொண்டு தமது ஜனநாயக கடைமையினை (வாக்களிப்பு) நிறைவேற்றுவதற்காக நேரத்திற்கு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தமது வாக்கினை செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :