2024 சனாதிபதி தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளை வெளியிடுகையில் எந்தவிதமான முறைதகாத செயலுக்கும் இடமளியாமல் மேற்படி பணியை மிகவும் சரியாகவும் நேர்த்தியாகவும் மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழுவும் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் நடவடிக்கை எடுப்பார்களென நாங்கள் நம்புகிறோம்.
அதைப்போலவே வாக்குகள் எண்ணப்படுகின்ற நிலையங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொலீஸாரை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுகள் நடவடிக்கை மேற்கொள்ளுமென நாங்கள் நம்புகிறோம்.
இந்த நிலைமையில் இரவுநேர ஊரடங்குச் சட்டம் தேர்தல் முடிவுகள் வெளியாகின்ற வேளையில் பொதுமக்கள் அமைதியை பேணிவருகின்ற நோக்கத்துடன் மாத்திரம் அமுலில் இருக்குமென நம்புகின்ற நாங்கள், தேர்தலுக்கு பிற்பட்ட காலத்தில் நாட்டில் உச்சமட்ட அமைதி நிலைமையைப் பேணிவருவதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் பிரிவுகளிடம் கேட்டுக்கொள்வதோடு நாட்டில் அமைதிநிலையைப் பேணிவருவதற்காக உச்சஅளவிலான ஒத்துழைப்பினை நல்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment