நுவரெலியா மாவட்ட நிலவரம் - 80% சத வீதம் வாக்கு பதிவு நிறைவு



க.கிஷாந்தன்-
21.09.2024 அன்று நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு மாலை 04.00 மணி வரை சுமூகமாக இடம் பெற்றதாகவும் 80% சதவீத மான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், நுவரெலியா மாவட்ட செயலாளரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான நந்தன கலபட அவருடைய காரியலயத்தில் 21.09.2024 அன்று மாலை நடைப்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் வாக்களிப்புகள் எவ்விதமான அசம்பாவிதங்களுமின்றி மிகவும் அமைதியான முறையில் நடைப்பெற்றதாக சுட்டி காட்டியதோடு பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் மேற் கொண்டார்கள் எனவும், அதிகாரிகள் தமது கடமைகளை சிறப்பான முறையில் முடிவுக்கு கொண்டு வந்தார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

21.09.2024 அன்று காலை 07.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகிய போதிலும் காலை வேளையில் பல பகுதிகளில் வாக்களிப்பு மந்த கதியில் இடம் பெற்றது. ஆனாலும், பிறகு பெருந்தோட்டப்பகுதி மற்றும் நகர் புறங்களில் வாக்களிப்பு மிகவும் சுறுசுறுப்பாக இடம் பெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் காலை 09 மணி வரை 30 வீதம் வாக்குகளே பதிவாகி இருந்தது. 12 மணியளவில் அது 45 வீதமாகவும், 01 மணியளவில் 72 வீதமாகவும் வாக்களிப்புகள் இடம் பெற்றன. பகல் 01 மணிக்கு பின் வாக்களிப்பு சுறுசுறுக்காக இடம் பெற்றது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் அதிகளவானவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணக்கூடியதாக இருந்தது.

நுவரெலியா மாவட்டத்திற்கு சர்வதேச கண்காணிப்பு குழு உறுப்பினர்களும் விஜயம் செய்துள்ளனர். பொதுவாகவே இந்த தேர்தல் மிகவும் அமைதியாக இடம் பெறுவதாக மக்களும் கருத்து தெரிவித்தனர்.

தேர்தல் வாக்களிப்பு நடைப்பெற்ற பொழுது அசம்பாவிதங்கள் எதுவுமின்றி அமைதியாக வாக்களிப்பு நடைப்பெற்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த வருடங்களை விட இந்த வருடம் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுப்பட்டனர். வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வருடங்களை விட இந்த தேர்தலில் அதிகமான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். வெளி மாவட்டங்களில் வேலை வாய்ப்பு பெற்று சென்றிருந்தவர்களும் அதிகமான அளவில் வாக்களிப்பில் ஈடுப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :