கடந்த ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவளித்த ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக உழைத்த அம்பாறை மாவட்டத்தில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனைத்து பிரதேசங்களினதும் அமைப்பாளர்களை நேரில் சென்று சந்தித்து அவர்களது களப்பணி சிறப்பாக நடைபெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எம். சபீஸ் தொடர்ந்தும் கட்சியின் பணிகளை வேகமாக முன்னெடுத்து செல்வதற்கான நடைமுறை சாத்தியங்கள் தொடர்பிலும் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்தார்
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவளித்து கட்சி தலைவர் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் களப்பணி செய்த சகல தேர்தல் தொகுதிகளும், மாவட்டங்களும் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாச அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment