நாடு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த கடந்த காலப்பகுதியில் அந்த நிலைமைகளை அனுபவித்தவர் என்ற வகையிலும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக பாராளுமன்ற சட்டமூலங்களை கொண்டு வந்த நிதியமைச்சர் என்ற வகையிலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தின் இறுதி நாளான இன்று, பல விடயங்கள் முன்வைக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அண்மைய பொருளாதார நெருக்கடியில், இலங்கையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததையும் நாடு பொருளாதார ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் பாரிய பிரச்சினையில் உள்ளதை சுட்டிக்காட்டி, அதை சரி செய்யக்கூடிய ஒருவர் இருந்தால், இந்த நாட்டை கையகப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார் என்றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் நிலைமை மிகவும் மோசமானதாகவும், இலங்கையைக் காப்பாற்றுவது என்பது யாராலும் முடியாத மிகப் பெரிய சவாலாக உள்ளதால், இந்தப் பிரேரணை கேலிக்கூத்தான பிரேரணை எனவும், அப்போது பிரதான எதிர்க்கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நாடு இவ்வளவு பாரதூரமான தேசிய பிரச்சினையை எதிர்நோக்கி வரும் வேளையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணத்தில் எதிர்க்கட்சிகள் பாரம்பரியமாக செயற்பட்டதாக தெரிவித்த அமைச்சர், சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது மற்றும் VAT வரி விதிப்பு தொடர்பிலும் சமூகத்தில் அவர்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியதையும் நினைவு கூர்ந்தார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3% இருந்த பொருளாதாரத்தை 12% ஆகக் கொண்டு வர முடிந்துள்ளது என்றும் கட்டுப்படுத்தக்கூடிய அனைத்து செலவுகளும் கட்டுப்படுத்த வலுவான நிதி மேலாண்மை சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது என்றும் கட்டுப்படுத்தக்கூடிய அனைத்து செலவுகளும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% ஐ தாண்டாது என்றும் நிதி பொறியில் மீண்டும் சிக்குதை நிறுத்துவதற்கு இந்த எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இக்கட்டான நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்று நாட்டை சாதகமான நிலைக்குக் கொண்டு வந்தவர் மீது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் நம்பிக்கை வைப்பது புத்திசாலித்தனமான செயற்பாடாகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment