இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க அவர்கள் பதவியேற்ற நிகழ்வினை முன்னிட்டு
ஏறாவூர் பிரதேசத்திலும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஒன்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு ஏறாவூரில் உறுப்பினர் தோழர் புஹாரி
அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய வகையில் மதத் தலைவர்கள் பொதுமக்கள், கட்சி ஆதரவாளர்கள் என்று பலரும் கலந்து சிறப்பித்தனர் ஏறாவூரில் உறுப்பினர்
தோழர் புஹாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் தோழர் அனுர குமார திசாநாயக்க அவர்களின் பதவியேற்பு விழாவினை மிகவும் ஏறாவூர் மக்கள் வெற்றியை கொண்டாடினர்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரா குமார அவர்கள் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்பரன்றும் இந்த வெற்றியை அனைவரும் அமைதியான முறையில் மற்றவர்கள் மனம் புண்படாத வகையில் இதனை நாம் கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்தார் குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment