தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு மருத்துவ பீடம்.-சம்மாந்துறை மக்கள் பேரணியில் ரணில்!



ம்பாறை வைத்தியசாலையை இணைத்துக்கொண்டு, முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் பயன்படுத்தும் விதத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஒன்றை அமைக்கவுள்ளோம். என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்மாந்துறையில் 2024.08.31 ஆம் திகதி இடம்பெற்ற மாபெரும் மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து கொண்ட "இயலும் ஸ்ரீலங்கா"மாபெரும் மக்கள் பேரணி சம்மாந்துறை பொது மைதானத்தில் றனூஸ் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விலேயே மேற்படி தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை பிரதான பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்குமாறு வேந்தர் பாயிஸ் முஸ்தபாவிடம் கூறியுள்ளதாகவும் அதேவேளை ஆசிரியர் கலாசாலைகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்றவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் கூடியுள்ள மக்கள் திரளைப்பார்க்கும்போது தனக்கு 1977 ஆண்டு தேர்தல் வெற்றியே ஞாபக்கத்துக்கு வருகின்றது என்றும் சம்மாந்துறை அஷ்ரப் அவர்களின் பிறந்த இடம் அத்துடன் நண்பர் நௌசாத் அவர்களும் வாழும் இடம் ஆகவே சம்மாந்துறை எனக்கு மறக்காது.

கடந்த கூடங்களின் றிஷாத் பதியூதீன் கூறினாராம் நான் நல்லம் என்னை சுற்றியுள்ளவர்கள் நல்லமில்லை என்று, இப்போது நடக்கவுள்ளது ஜனாதிபதி தேர்தல். இது நாட்டுக்கு நல்ல ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஜனாதிபதியைச் சுற்றியுள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பது பாராளுமன்ற தேர்தலில்; அப்படியானால் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் றிஷாத் அணியினரிடம் கேட்டுக்கொள்கிறேன் நான் நல்லம் என்றால் என்னை தெரிவு செய்யுங்கள் என்று. அவர்களுக்கு நன்றாக தெரியும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க நான் என்ன செய்தேன் என்று.

இவர்கள் முஸ்லிம் ஜனாஷக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் அழுத்தங்களை தரவில்லை. மாறாக பொருட்களின் விலைகளை குறைக்கும் விடயத்திலேயே அழுத்தங்களை பிரயோகித்தனர். எங்களது அரசாங்கமே அதற்கான சட்டங்களை தயாரித்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

கஷ்ட்டமான காலத்தில் நான் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டவன் என்ற வகையில் இப்போது களமிறங்கியுள்ளது சுயச்சை வேட்பாளராக; நாட்டை முன்கொண்டு செல்ல எல்லா கட்சிகளிடமும் உதவியை கோரினேன், சில கட்சிகள் எனக்கு உதவ முன்வந்தன சிலர் எதிர் தரப்பில் உள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். முழுமையாக அது வீழ்ச்சியடைந்துள்ளது. நான் பதவியை பொறுப்பேற்றதிலிருந்து அதனை சீர்செய்ய பல்வேறு பிராயத்தனன்களை எடுத்தேன். அப்போது சம்மாந்துறை கல்முனை மற்றும் காத்தான்குடி போன்ற இடங்களில் பெற்றோலுக்காகவும் கேஸுக்காகவும் நீண்ட வரிசைகள் இருந்தன அவற்றை நான் இல்லாமலாக்கினேன். அதற்க்கு IMF எங்களுக்கு உதவியது. இவ்வாறான நிலை நீடிக்காமல் இருக்க வேண்டுமானால் இவர்களுடனான ஒப்பந்தங்களை மீறாது நாங்கள் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாங்கள் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு உதவினோம்.

அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்தில் 5000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கினோம் பின்னர் ஏப்ரல் மாதம் 10000 ரூபாயாக அதிகரித்தோம். எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு பாரியளவான அதிகரிப்பை வழங்கவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

அனுராவும் சஜித்தும் வரிகளை குறைக்குமாறு கேட்கின்றனர் 2019 ஆம் ஆண்டு கோட்டாபாய ராஜபக்ச வரியை குறைத்ததனால் தான் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டது.

இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. அடுத்த வருடத்தில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்கவுள்ளோம். இன்னும் 50000 பேருக்கு அவர்கள் விரும்பும் துறைகளில் தொழில்பயிற்சிகளையும் வழங்கவுள்ளோம்.

விவசாயத்துறையை நவீனமயமாக்கி தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்கவுள்ளோம்.

சம்மாந்துறையில் 35000 நெற்காணிகள் இருக்கின்றன இப்பிரதேசங்களின் நெல் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம்.

திருகோணமலை பிரதேசத்தில் 1000 ஏக்கரில் முதலீட்டு வலயத்தை ஏற்படுத்தவுள்ளோம். அதனுடன் இணைந்தால்போல் சம்மாந்துறையிலும் தொழில் பேட்டையை உருவாக்கவுள்ளோம். அத்துடன் தொழினுட்ப துறையையும் அபிவிருத்தி செய்யவுள்ளோம்.

காணிகளுக்கான உறுதி பத்திரங்களையும் வழங்கவுள்ளோம்.

பால் உற்பத்தியையும் அதிகரிக்கவுள்ளோம்

விவசாயிகளுக்காக உரம் சலுகை விலையில் வழங்கவுள்ள தாகவும் தெரிவித்தார்.

நிகழ்வில் அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, முஷாரப் மற்றும் முன்னாள் ஆளுநர் ஆஷாத் சாலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :