அனுராவின் வெற்றி முழு நாட்டு மக்களினதும் வெற்றி! -வாழ்த்துச் செய்தியில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் பைஸர்



லங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டமையை முன்னிட்டு அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் பிரதம அஞ்சல் அதிபர் தேசமான்ய யூ எல் எம் பைஸர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்;

இலங்கை தேசமானது ஒரு செழிப்பான காலத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளமையானது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். இந்த வெற்றி நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் ஒன்றிணைந்து சாதி, இன, மத பேதமின்றி ஒற்றுமையுடன் வாக்களித்து பெற்றுக் கொடுத்த வெற்றியாகும். எனவே இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு இந்த நாட்டு மக்களுக்கு துன்பங்களைக் குறைத்து கடன் சுமையிலிருந்து நாட்டை மீட்டு அன்னிய செலாவணியை இந்த நாட்டுக்கு கொண்டு வரக்கூடிய வகையில் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டுமென அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த நாட்டு மக்களை பொருளாதார சுமையிலிருந்து மீட்டடெடுத்து நாட்டு மக்களுக்கு லஞ்சம், ஊழல் மற்றும் மோசடி அற்ற ஒரு சிறந்த மக்களாட்சியை எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும் என அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :