வாகன இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு பசி பட்னியில் இருக்கும் மக்களுக்கு உணவு வழங்குங்கள் ரணிலுக்கு சவால் விடும் இராதாகிருஷ்ணன் எம்.பி



க.கிஷாந்தன்-
லையக மக்கள் முன்னணி, மலையக இளைஞர் முன்னணி இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர் மாநாடு (14.09.2024) அன்று ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், மலையக இளைஞர் முன்னணியின் தலைவருமான இராதாகிருஸ்ணன் ராஜாராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாம் குடும்பத்தின் பேரனும் சர்வதேச அப்துல் கலாம் அறக்கட்டளையின் ஸ்தாபக இணைத்தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே.எம்.ஜே சேக் சலீம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விசேட அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டதுடன் இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற இதயக்கனி சஞ்சிகையின் வெளியீட்டாளரும் பிரதம ஆசிரியருமான இதயக்கனி எஸ்.விஜயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், பொருலாளர் தாழமுத்து சுதாகரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பெருந்திரளான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய இராதாகிருஷ்ணன் எம்.பி…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலையில் கூறினார் வாகன இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று. முதலில் மலையக மக்களுக்கு வாகன இறக்குமதி தேவையில்லை. வாகன இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு பசி பட்டினியில் இருக்கும் மக்களுக்கு முதலில் உணவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகன இறக்குமதியை செய்து அவர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் சூழ்ச்சியையே செய்கின்றார் ரணில் விக்கிரமசிங்க. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவித்தார்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :