புத்தளம்,தில்லையடி, அல்-ஜித்தா, அலிகார் அஹதியா மாணவர்களின் கலாச்சார போட்டி நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழா நிகழ்வு.!



கரீம் எ. மிஸ்காத்-
லகுக்கு வந்துதித்த உத்தமர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பரைசாட்டிய அல்-குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் சிறப்புக்களை மாணவர் உள்ளங்களில் இருந்து வெளிப்படுத்தி, தமது திறமைகளை காட்டிய "அலிகார் அஹதியா" மாணவர்களுக்கு சான்றிதல்கள், பரிசுகள் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினமான நேற்று (16/09/2024)
அல்ஹஸனாத் ஜூம்மா பள்ளிவாசலின் முற்றவெளியில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.

அஹதியா பாடசாலையின் அதிபர் மசூதா வாஹித் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் அலா அஹமட் கலந்து அவர்கள் கொண்டார்.

அத்தோடு அஹதியாவில் கல்விகற்கும் மாணவர்களின் உளத்தூய்மையை வளர்க்கும் வகையில் காலை, மலையில் அல்லாஹ்வை நினைவு கூறும் துஆக்கள் உள்ளடங்கியதாக,
அலிகார் அஹதியா அதிபர் மசூதா வாஹிதினால் தொகுப்பாக்கம் செய்யப்பட்ட நூலுக்கு மெளலவி நிஹால் அவர்களினால் விளக்கம் வழங்கப்பட்டதுடன், குறித்த நூல் மாணவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.


மேலும் மாணவர்களின் ஒழுக்கமேம்பாடும், ஆன்மீக விருத்தியின் மூலம், சமூக மேம்பாடும் ஒவ்வொரு மனிதனையும் சிறப்பாக வாழவைகின்றது என்பது பற்றி உதவிப் பணிப்பாளர் அலா அஹமட் அவர்கள் உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் அல் ஹஸனாத் பள்ளி நிருவாக சபை தலைவர் மௌலவி பரீத், உதவித்தலைவர் ஹபீபுர்ரஹ்மான், முன்னால் பிரதேச செயலாளர் முஹ்சீன், புத்தளம் தளவைத்திய சாலையின் பிரதம தாதி என்.எம். பர்ஹான், சமுர்த்தி அதிகாரி எம். நியாஸ் என பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்ச்சிகளை ஆசிரியர் எம்.எம். றிஸ்வான் அவர்கள் தொகுத்து வழங்கினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :