முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் என்ன? பகிரங்கப்படுத்துவார்களா?- உதுமான்கண்டு நாபீர் கேள்வி.



முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளதாக கூறுகின்றனர். இதேவேளை தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள், தாங்கள் வேட்பாளர்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் பகிரங்கப்படுத்யே அவர்கள் சார்ந்த மக்களிடம் வாக்குகளைக் கோருகின்றனர்.

முஸ்லிம் மக்கள், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ஆதரிக்கும் வேட்பாளர்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்புகின்றனர்.

கடந்தகாலங்களில் இவர்கள் கட்சிகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்துகொண்டதாக கூறுகின்ற போதிலும் இவற்றின் ஊடாக பதவிகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டார்களே ஒழிய மக்கள் நலன் எதுவும் நிவர்த்திக்கப்படவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.

அண்மையில் மனோகணேசன் தீகாம்பரம் போறோர் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் வெளிப்படையாக கூறப்பட்டது.

முஸ்லிம்களுக்கும் பல்வேறு தேவைகள் இருக்கின்றன அவைகள் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் என்று கூறிக்கொண்டிருப்போர் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களை வெளிப்படுத்த வேண்டும்.

றவூப் ஹக்கீம் ரணில் விக்கிரமசிங்கவை கூட்டிவந்து அப்போது சாய்ந்தமருதுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இறுதியில் அது காற்றில் பறக்கவிடப்பட்டன. இப்போது ரணிலை அதாவுல்லாஹ் கூட்டிவந்தார் ரணில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து எதனையும் கூறாமலேயே சென்று விட்டார்.

மக்கள் எதிர்பார்ப்பது இவர்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் என்ன? வழமைபோன்று அவர்களுக்கான வரப்பிரசாதங்கள் மட்டும் தானா? பதிலளிப்பார்களா?

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :