வென்றவருடன் நின்ற அரசியல்வாதிகளுக்கு ஏதாவது கிடைக்கும். அவர்களுடன் நின்ற பொது மக்களுக்கு கொஞ்சம் சந்தோசம் கிடைக்குமே தவிர வேறு பெரிதாய் கிடைக்காது. ஆனால் பொதுமகன் ஆதரித்த அதே அரசியல்வாதி தோற்றால் அவனை எதிர்த்து நின்ற கட்சிக்காரன் வென்ற மாற்று அரசியல்வாதி பக்கம் போய் விடுவான். அவனோடு நின்ற பொது மகனே அனாதரவாய் நிற்பான்.
ரவூப் ஹக்கீம் கட்சியினர் மஹிந்தவை ஏசாத ஏச்சா? 2005ல் அந்தாள் வென்றதும் 2006ல் ஹக்கீம் ஓடிப்போய் மஹிந்த காலில் விழுந்து அமைச்சு பதவியை எடுத்தார். அது போல் 2010ல் மஹிந்தவிடம் ஹக்கீம் கோஷ்டி நக்கினர்.
முஷர்ரப் மொட்டுக்கட்சிக்கு ஏசாத ஏச்சா? பின்னர் மஹிந்த, கோட்டாவிடம் சரண் அடைந்தார். இப்போ அவர்களையும் விட்டு விட்டு ரணிலிடம்.
அநுர வென்றால் அவரிடம் போவார்.
இதுதான் முஸ்லிம் அரசியல் என்பதை பொதுமகன் புரிய வேண்டும்.
தோற்றவன் பக்கம் நின்றவன் வென்றவன் பக்கம் பாய்வது என்பது மக்கள் ஓட்டுள்ள அரசியல் கட்சிகள் வழமை.
ஆகவே பொது மக்கள் மவுனமாக இருந்து தான் விரும்புபவருக்கு வாக்களிக்கலாம் அல்லது வாக்களிக்காமல் விடலாம்.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
ஸ்ரீலங்கா ஜம்மிய்யதுல் உலமா கவுன்சில்
0 comments :
Post a Comment