தமிழ் பொது வேட்பாளர் அரியத்தின் அம்பாறை விஜயத்தின்போது பொலிசார் இடையூறு?



வி.ரி. சகாதேவராஜா-
னாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியத்தின் அம்பாறை விஜயத்தின்போது பொலிசார் இடையூறு விளைவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்முனை பெரிய நீலாவணையில் தமிழ்ப்பொதுவேட்பாளரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஆலயம் சென்று வந்ததும் பொலிசார் இடையூறு விளைவித்தனர்.

பொலிசார் வந்து தேர்தல் பிரச்சாரத்தின் போது சின்னம் பதித்த ரீசேட் கொடிகளை தாங்கினால் கைது செய்வோம் என்றனர்.

அத் தருணம் அங்கு இரு சாராருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. விசேட அதிரடிப் படையினரும் நின்றனர்.

அங்கு நின்ற காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கூறுகையில்
சிங்கள பேரினவாதம் என்றும் சிறுபான்மையினரின் உரிமையை நசுக்கி கொண்டு தான் இருக்கிறது, தென்னிலங்கை பெரும்பான்மையின வேட்பாளர்களின் பொதுக்கூட்டங்களில், வாகன தொடரணியில், பிரச்சார நடைபவனியில் தடுக்கப்படாத sticker, t-shirt, கொடிகள் தமிழ்ப் பொது வேட்பாளரின் கூட்டத்தில் மட்டும் தடுக்கப்படுவது ஏன்?

இலங்கை நாட்டில் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்களவருக்கு ஒரு சட்டமா?
இதனால் தான் நாம் எமது அரசியல் உரிமைக்காக இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். என்றார். சற்று நேரத்தில் இரு சாராரும் கலைந்து சென்றனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :