அனுரகுமார திசாநாயக்க நாளை காலை ஜனாதிபதியாக பதவியேற்பு



டைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்ககளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க, நாளை காலை இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார்.
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் அவரது பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.
அதனையடுத்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவிக்கு நியமனிக்கப்படவுள்ளார்.
இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத், நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
அதற்கு மேலதிகமாக புதிய ஜனாதிபதியின் கீழ் 15 அமைச்சுப் பொறுப்புகளும் கொண்டுவரப்பவுள்ளன. சில அமைச்சுகளின் பொறுப்புகள் ஹரிணி மற்றும் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
அதனையடுத்து இரண்டொரு நாட்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அமைச்சுகளின் நிர்வாகம் அமைச்சு செயலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :